Saturday, November 5, 2011

அழகே அழகு - விரல்களே விழிகள்.

ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மற்றொரு பாடல் வந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்தப் பாடல்கள் ஒரே ராகத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அப்படித்தான் சிவரஞ்சனியில் ஏழிசை கீதமேவை வாசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று இந்தப் பாடல் வந்துவிட்டது. பிள்ளையார் பிடிக்க .பிள்ளையாருக்குப் பிடித்த கொழுக்கட்டையாய் முடிந்த  மாதிரி.

என்ன ஒரு அற்புதமான பாடல்.சில இடங்களில் சிவரஞ்சனியின் இலக்கணங்களை மீறினாலும் இசையின் அழகு கூடுகிறதே தவிரக் குறைவதில்லை.ஒரு புலனால் மற்றொரு புலனை உணர்வதற்குப் பெயர் synaesthesia. உ-ம் இசையைப் பார்ப்பது. இங்கு விழிப்புலன் இல்லாத ஒருவன் தன் விரல்களால் காண்கிறான். கவியரசு கண்ணதாசனின் வரிகள். அந்திமழையாய்ப் பொழிய ஆரம்பித்த வைரமுத்துவின் ஆவேசக் காதல் வரிகளுக்கு இடையே மெல்லிய தூறலாய்ப் பெய்யும் கவியரசின் கவிச்சாரல் இந்தப் பாடல்

அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே




2 comments:

  1. அடப் பாவி மனுஷா
    என் இதயம் கவர்ந்த அத்தனை பாடல்களும் உங்களையும் இப்படி போட்டுத் தாக்குகிறதே..
    அழகே அழகு பாடலை கமலின் மன்மத ரசனையை அறிந்த கவியரசு கண்ணதாசன் எழுதிய அந்த அற்புதக் கவிதையை ராஜா, இளையராஜா மோகனக் குரலாளர் ஜேசுவை விட்டுப் பாட வைத்திருப்பது இருக்கிறதே, பளிங்குத் தரையில் செம்பஞ்சுக் குழம்பை மெல்லிய துணியால் ஒத்தி ஒத்தி எடுப்பது மாதிரி, ஆஹா..
    சிருங்கார ரசத்தின் ஒரு மெல்லிய பதிவு அது..

    வாழ்த்துக்கள்

    எஸ் வி வி

    ReplyDelete
  2. என் கல்லூரி நாட்களையும், என்னுடைய நண்பன் ஒருவனையும் ஞாபகப் படுத்தும் பாடல். அழகிய வரிகள் கொண்ட திரைப்பாடல்கள் யாவுமே, சாகா வரமடைந்தவை. இதுவும் அத்தகைய மார்கண்டேய பாடல். பட்டும் படாமல், விரசமின்றி ஒரு பெண்ணை அழகாக வர்ணித்துள்ளார் கண்ணதாசன். பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் - அன்பன் இராஜேஸ்வரன். ஆ

    ReplyDelete