Wednesday, December 22, 2010

தேகம் -வலியின் குரல்

இன்று காலை உடுமலை .காமில் இருந்து ஆர்டர் செய்த தேகம் நாவல் வந்தது.மற்ற தமிழ் நாவல்களுடன் ஒப்பிட்டால்  சிறிய நாவல்.தொன்னூறு ரூபாய் என்பது ஒன்றுமே இல்லை.அருந்ததி ராயின் மொக்க்கை நாவலுக்குப் பன்னிரண்டு வருடம் முன்பு  நானூற்று ஐம்பது ரூபாய் அழுது வாங்கியதை ஒப்பிட்டால் தமிழின் இழிந்த நிலை புலப்படும்.இங்கு முழு நேர எழுத்தாளனாயிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.

         நாவலுக்கு வருவோம்.சமூகம் அசிங்கம் என்றும் அநாகரிகம் என்றும் ஒரு மெல்லிய திரையைப் போட்டு மூடி வைத்துள்ள விஷயங்களைக் காண மறுப்பவர்களுக்குத் தன் அருவெறுக்கத்தக்க நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு மாயக் கண்ணாடி இந்த நாவல்.மெல்லிய கேரி பேக் வழியே பிதுங்கி நிற்கும் காய்கறிகள் போல நம் மனத்தினுள் பிதுங்கி எந்நேரமும் வெளி வரத்துடிக்கும் உணர்வுகளை முகமூடியின்றி வெளிப்படுத்தும் பிரதிபலிப்பு.நம் சமூகத்தில் காமம் மற்றும் வன்முறை (aggression) ஆகிய அடிப்படை உந்துதல்களுக்குச்  சரியான வடிகால் இல்லாமையின் வெளிப்பாடு.
      ஆங்காங்கே அற்புத கவித்துவ வெளிப்பாடுகள்.காட்டு நாயக்கர்களின் அவல நிலையையும் ரயில் நிலையங்களில் மலத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சுபவனின் மீது கொண்ட கருணையையும் வெளிப்படுத்தும் கணங்கள் சிறந்தவை
            ஃப்ராய்ட் போன்ற அறிஞர்கள் அடக்கப்பட்ட காமம் வன்முறையாக வெலிப்படும் என்றனர். மனதின் அசிங்கமான ஆழத்தில் இருக்கும் மலங்களை அறிவதே ஆன்மீகமாகும்.சாருவின் தேகம் ஒரு ஆன்மீக வெளிப்பாடு
      

No comments:

Post a Comment